தனியுரிமைக் கொள்கை

முதல் பக்கம் / தனியுரிமைக் கொள்கை

வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தனியுரிமைக் கொள்கை

நீங்கள் எமது இணையத்தளமான www.sliclife.com இற்கு வருகை தரும் போது SLIC Life உங்கள் தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, வெளிப்படுத்துகிறது மற்றும் பாதுகாக்கிறது என்பதை இந்தத் தனியுரிமை அறிக்கை விவரிக்கிறது. தரவுப் பாதுகாப்புச் சட்டங்களின் பொருந்தக்கூடிய ஏற்பாடுகளுக்கு இணங்க, உங்கள் தரவின் தனியுரிமைக்கு நாம் உரிய கவனம் செலுத்துகிறோம். இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தனியுரிமை அறிக்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் உட்படுகிறீர்கள்.

  1. பொருந்தும் எல்லை

    கீழே தரப்பட்டுள்ள தரவுப் பாதுகாப்பு அறிவித்தல் SLIC இன் இணைய இருப்புக்கு உரியது; இணையத்தளம் SLIC செயலிக்கான இணைப்புகளைக் கொண்டுள்ளது.

  2. உங்கள் தரவின் பயன்பாடு

    நீங்கள் எமது இணையத்தளத்திற்கு வருகை தரும் போது உங்கள் தனிப்பட்ட தரவு எவ்வாறு செயலாக்கப்படும் என்பதையும், தரவுப் பாதுகாப்புச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உங்கள் உரிமைகள் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்காகவும் கீழே விளக்கியுள்ளோம்.

    1. தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளல்

      தரவுப் பாதுகாப்பு அதிகாரி
      இணக்கப்பாட்டுத் திணைக்களம்
      8ஆம் மாடி, ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் கோர்ப்பரேஷன் லைஃப் லிமிடெட்
      இல. 21, வொக்ஸ்ஹோல் வீதி, கொழும்பு 02
      தொலைபேசி: +94 11 2377 377
      மின்னஞ்சல்: email@sliclife.com

    2. நாம் பயன்படுத்தும் தரவு வகைகளும், தனிப்பட்ட தரவை நாம் செயலாக்கும் நோக்கங்களும்

      பொதுவாக, எமது இணையத்தளத்திற்கு அநாமதேயமாக வருகை தர உங்களுக்குச் சுதந்திரம் உண்டு; SLIC Life தனது இணையத்தளப் பார்வையாளர்களின் எந்தவொரு தனிப்பட்ட அல்லது அடையாளம் காணக்கூடிய தரவையும் (உதாரணமாக IP முகவரிகள்) சேமிப்பதில்லை.

      நீங்கள் இந்த இணையத்தளத்திற்கு வருகை தரும் போது நீங்கள் பயன்படுத்தும் கணினி அல்லது சாதனம் பற்றிய சில தரவுகளை நாம் தானாகவே பெறுகிறோம்; அவற்றுள்: உங்கள் இணைய நெறிமுறை (IP) முகவரி; நீங்கள் பயன்படுத்தும் உலாவி அல்லது சாதன வகை பற்றிய தகவல்; குக்கீகள், பிக்சல் டேக்குகள் மற்றும் அது போன்ற ஏனைய தொழில்நுட்பங்கள் மூலம் சேகரிக்கப்படும் தரவு; உங்கள் வருகையின் திகதி மற்றும் நேரம்; மற்றும் இந்த இணையத்தளத்திற்கு வருவதற்கு உடனடியாக முன்னர் நீங்கள் பார்வையிட்ட இணையப் பக்கம் போன்றவை அடங்கும். உள்ளடக்கத்தின் வகை மற்றும் பெயர், பார்த்த நேரம் போன்ற, இந்த இணையத்தளத்தில் நீங்கள் பார்க்கும் வீடியோக்கள் அல்லது ஏனைய உள்ளடக்கங்கள் பற்றிய தரவையும் நாம் சேகரிக்கிறோம்.

    3. சட்டக் கட்டமைப்பு

      2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம், 2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க கொடுப்பனவுச் சாதன மோசடிகள் சட்டம், அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள், 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினிக் குற்றங்கள் சட்டம் மற்றும் தனிப்பட்ட தரவுச் செயலாக்கத்திற்குப் பொருந்தும் ஏனைய அனைத்துச் சட்டங்களின் ஏற்பாடுகளின் அடிப்படையில் நாம் உங்கள் தரவைச் செயலாக்குகிறோம்.

    4. தரவுப் பயன்பாடு

      இடர்களை எழுதுவதற்கும், இழப்பீட்டுக் கோரிக்கைகளை மதிப்பிடுவதற்கும், மிகவும் விரும்பத்தக்க காப்புறுதித் தீர்வுகள்/சேவைகளை வழங்குவதற்கும் SLIC Life தனது வாடிக்கையாளர்கள் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவைச் சேகரித்துச் செயலாக்குகிறது. ஆக்சுவரியல் அல்லது புள்ளிவிபரச் செயற்பாடுகள் போன்ற சட்டம் அல்லது ஒழுங்குவிதிகளால் தேவைப்படும் பணிகளை மேற்கொள்ளல்; தயாரிப்பு மற்றும் சேவை மேம்பாடு; தரவுப் பாதுகாப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் ஏனைய அவசியமான வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவப் பணிகள், துஷ்பிரயோகத் தடுப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் தனிப்பட்ட தரவு செயலாக்கப்படலாம். தனிப்பட்ட தரவு இந்தத் தேவைகளுக்கு ஏற்ப, முன்னரே வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதுடன், சட்டரீதியாக ஏற்புடைய காரணம் ஒன்று இருப்பதை உறுதி செய்தவாறு தனிப்பட்ட தரவு செயலாக்கப்படும்.

      தரவுப் பாதுகாப்புச் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, கீழே குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக SLIC Life தனிப்பட்ட தரவை வெளிப்படுத்தலாம்:

      1. நிறுவனங்களின் குழுமத்திற்கு
      2. சேவைப் பங்காளர்கள் மற்றும் மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்களுக்கு
      3. நிறுவனக் கொடுக்கல்வாங்கல்களின் (உதாரணமாக இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் போன்றவை) சூழலில் வணிகப் பங்காளர்களுக்கு.
      4. ஒழுங்குமுறை மற்றும் சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்களுக்கு.
      5. உரிய இரகசியம் பேணும் உடன்படிக்கைகளுக்கு உட்பட்டு தரவுச் சேமிப்பு வசதிகளை வழங்கும் மூன்றாம் தரப்பினர்
      6. சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய தொழில்சார் சேவை நிறுவனங்கள் (எமது கணக்காய்வாளர்கள், ஆக்சுவரிகள் மற்றும் மீள்காப்புறுதியாளர்கள் உள்ளிட்டோர்)

      நிறுவன இணையத்தளத்தை நிர்வகித்து முகாமை செய்தல்; உங்கள் பயனர் அனுபவத்தைத் தனிப்பயனாக்கல்; SLIC Life இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றி உங்களைத் தொடர்பு கொள்ளல்; விளம்பரப் பொருட்கள் மற்றும் சலுகைகளைப் பகிர்தல் (ஒட்டுமொத்தமாக “சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள்” என அழைக்கப்படுபவை); நிறுவனக் கொடுக்கல்வாங்கல்கள், கணக்காய்வுகள் மற்றும் தரவுப் பகுப்பாய்வு போன்ற எமது உள்ளக வணிக நோக்கங்களை மேற்கொள்ளல்; இந்த இணையத்தளத்தை நீங்கள் பயன்படுத்தும் விதம் மற்றும் எம்முடனான உங்கள் தொடர்பாடல் பற்றிய ஆய்வு மற்றும் பகுப்பாய்வை மேற்கொள்ளல்; புதிய தயாரிப்புகளை உருவாக்கல்; இந்த இணையத்தளத்தையும் எமது தற்போதைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் மேம்படுத்தல்; பயன்பாட்டுப் போக்குகளை அடையாளம் காணல்; எமது விளம்பரங்களின் செயல்திறனை மதிப்பிடல்; எமது விளம்பரப் பிரச்சாரங்களை மேம்படுத்தல்; மற்றும் எமது தொடர்பாடல்களின் வினைத்திறனைத் தீர்மானித்தல் ஆகியவற்றுக்கும் நாம் தரவைப் பயன்படுத்தலாம்.

  3. குக்கீகள் மற்றும் ஏனைய இணையத் தொழில்நுட்பங்கள்

    சில அம்சங்களையும் செயற்பாடுகளையும் செயற்படுத்துவதற்கும், இந்த இணையத்தளத்தையும் எமது சேவைகளையும் மேம்படுத்த உதவும் மேலதிகத் தகவல்களைச் சேகரிப்பதற்கும், இந்த இணையத்தளம் மூன்றாம் தரப்பு வழங்குநர்களின் குக்கீகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட குக்கீகளையும் அது போன்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது. இந்த இணையத்தளம் அமர்வுக் குக்கீகளையும் (நீங்கள் உலாவியை மூடும் போது காலாவதியாகும்) நிரந்தரக் குக்கீகளையும் (நீங்கள் அவற்றை நீக்கும் வரை அல்லது அவை காலாவதியாகும் வரை உலாவியை மூடிய பின்னரும் உங்கள் சாதனத்தில் இருக்கும்) பயன்படுத்தலாம். குக்கீகள் மூலம் உங்கள் சாதனத்திலிருந்து தரவு சேகரிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை எனில், குக்கீகளின் பயன்பாட்டை நீங்கள் நிராகரிக்கலாம்.

  4. தரவுப் பாதுகாப்பு

    இணையம் வழியான எந்தவொரு தரவுப் பரிமாற்றமும் அல்லது தரவுச் சேமிப்பும் 100% பாதுகாப்பானது என உறுதி செய்ய முடியாதெனினும், அத்தகைய இடர்களைக் குறைப்பதற்கு நாம் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கிறோம். தரவின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் உணர்ந்தால், மேலே தரப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் தரவுப் பாதுகாப்பு அதிகாரியை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

  5. தனியுரிமை அறிவித்தலைப் புதுப்பித்தல்

    தேவைப்படும் போது நாம் இந்தத் தனியுரிமை அறிவித்தலை மீளாய்வு செய்கிறோம்.