ப்ஃரீடம் லைஃப் ஸ்டைல் ப்லஸ்

உங்கள் காப்புறுதிப் பயணத்தை மேம்படுத்துங்கள்

முதல் பக்கம் / ப்ஃரீடம் லைஃப் ஸ்டைல் ப்லஸ்

ப்ஃரீடம் லைஃப் ஸ்டைல் ப்லஸ்

உங்கள் பார்வையை யதார்த்தமாக மாற்றும், உங்கள் ஓய்வு கால வாழ்க்கை அநாவசியமான தொந்தரவுகள் இல்லாததாகவும் சாத்தியங்கள் நிறைந்ததாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இத் திட்டத்தின் மூலம் இப்பொழுதே சரியானதொரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மன அழுத்தம் இல்லாததும் தொந்தரவு இல்லாததுமான ஓய்வு காலத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பாதுகாத்திடுங்கள். இவ் ஓய்வூதியத்திட்டத்தின் மூலம் எமது இலக்கானது, காபபுறுதிதாரர்கள் நிதிச் சுதந்திரத்திற்காக நிலையான மாதாந்த வருமானம் பெறுவதை உறுதி செய்து கொள்வதினூடாக அத்தகைய சுதந்திரத்தை வழங்குவதாகும். மேலும், மருத்துவமனை அல்லது மருத்துவக் கட்டணச் சீட்டுக்களைச் சமர்ப்பிக்காத விதத்தில் வருடாந்த உடல்நலப் பராமரிப்பு அனுகூலமாக உங்கள் மாதாந்த ஓய்வூதியத் தொகையில் 5 மடங்கை கோருவதற்கான வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கின்றது.

அனுகூலங்கள்

உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வுகால வருமானம்

உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வுகால வருமானத்தில் கூட்டு வட்டி விகித அடிப்படையில் 5% அதிகரிப்புடன் பாதுகாப்பான நிதிசார் எதிர்காலத்தை அனுபவிப்பதோடு, உங்கள் மன அமைதியையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

வருடாந்த சுகாதாரப் பராமரிப்புக் கொடுப்பனவு

மாதாந்த ஓய்வுகால வருமானத்தில் 5 மடங்காக இருந்து வரும் ஒரு வருடாந்த சுகாதாரப் பராமரிப்பு கொடுப்பனவு செலுத்தப்படுவதுடன், உங்கள் உடல்நலக் கவலைகளின்றி, கூட்டு வட்டி அடிப்படையில் வருடாந்தம் 5% அதிகரித்துச் செல்லும்.

காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவுகள்

காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவுகள் 5 வருடங்கள் தொடக்கம் 40 வருடங்கள் வரையிலான நெகிழ்வான காப்புறுதிப் பத்திரத்தின் காலப்பிரிவுகளிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள். இது உங்கள் ஓய்வூதியத்திட்டமிடல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிதி பெறும் காலப்பகுதியின் நெகிழ்ச்சித் தன்மை

ஓய்வூதிய நிதியத்தைப் பெற்றுக் கொள்ளும் காலப்பிரிவு தேவையின் பிரகாரமும், 5 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரையிலான விருப்பத்தெரிவுகளுடன் நீங்கள் வருமானம் பெறும் காலத்தை தனிப்பயனாக்குங்கள்.

கட்டுப்பணக் கொடுப்பனவு நெகிழ்ச்சித் தன்மை

உங்களுடைய பட்ஜட்டை சௌகரியமாகப் பொருத்தி, மாதாந்தக் கட்டுப்பணக் கொடுப்பனவுகள் முதல் வருடாந்தக் கட்டுப்பணக் கொடுப்பனவுகளைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்கி உங்களுடைய நிதிகளை நிர்வகித்திடுங்கள.

மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புகள்

கடும் சுகயீன காப்புறுதி, மருத்துவமனைச் சேர்ப்புக் காப்புறுதி போன்ற விருப்பத்தேர்வுக் காப்புறுதிகளுடன் விரிவான பாதுகாப்பை உறுதி செய்து, உங்கள் பாதுகாப்பை மேம்படுத்துங்கள்.

கூட்டு போனஸ் கொடுப்பனவுகள்

உங்கள் வருடாந்தத் தொகையுடன் செலுத்தப்படும் ஒட்டுமொத்த ஊக்கத்தொகைகளிலிருந்து பயனடைவதுடன் இது உங்கள் முதலீடுகளுக்கு அதிக மதிப்பைச் சேர்க்கக்கூடியது.

மரணத்தின் போது செலுத்தப்படும் நட்ட ஈட்டுத் தொகை (காப்புறுதிக் கால கட்டுப்பணம்)

அகால மரணம் ஏற்பட்டால், செலுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பணங்களும் அல்லது பாலிசியின் ஒப்படைவு மதிப்பு, இதில் எது அதிகமோ அதை திருப்பித் தருவதன் மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மன அமைதியை உறுதி செய்யுங்கள்.

மரணத்தின் போது செலுத்தப்படும் நட்ட ஈட்டுத் தொகை (ஓய்வுக்குப் பிறகு)

காப்புறுதியில் திட்டமிடப்பட்டுள்ளபடி ஓய்வூதிய நிதியின் மீதமுள்ள தொகையுடன் உங்கள் நியமனதாரருக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கவும்.

நீண்டகால நிரந்தர உடல் இயலாமை

விபத்து அல்லது சுகவீனம் காரணமாக இயலாமை ஏற்பட்டால் தள்ளுபடி செய்யப்பட்ட எதிர்கால கட்டுப்பணம் மற்றும் தொடர்ச்சியான மாதாந்திர செலுத்துதல்கள் மூலம் உங்கள் வருமானத்தைப் பாதுகாத்திடுங்கள்.

தகைமை

18 தொடக்கம் 65 வயது வரையிலான வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ப்ஃரீடம் லைப் ஸ்டைல் ப்ளஸ் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதியுடையவராவார்கள்.

அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளும் வயது 45 தொடக்கம் 70 வருடங்கள் வரையிலான வரையில் இருந்து வரும்.

ஒழுங்கான ஓய்வூதியத் திட்டங்கள் இல்லாதிருக்கும் தனியார் துறையில் தொழில் செய்து வரும் ஊழியர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.

Prosperity Unlocked

Discover the joy of a secure, enriched retirement

  • 1

    Continual income growth for lasting comfort.

  • 2

    Tailored terms for precise financial planning.

  • 3

    Comprehensive protections for unwavering security.

Insurance for all from the largest & strongest National Insurer