திவி திலின பாதுகாப்புத் திட்டம்

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் பக்கம் / திவி திலின பாதுகாப்புத் திட்டம்

திவி திலின பாதுகாப்புத் திட்டம்

உங்களது ஆற்றல்மிகு வாழ்க்கைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான ஆயுள் காப்புறுதித் தீர்வான திவி திலின திட்டத்தின் மூலம் நிதிசார் நெகிழ்வுத்தன்மையின் சக்தியைப் பெற்றிடுங்கள். இதனூடாக நிலையான கட்டுப்பணங்களின் மேல் கட்டமைக்கப்பட்டள்ள கட்டுப்பாடுகளை தகர்த்து, முதிர்ச்சியின் போது முழுமையான பாதுகாப்புடன் கூடிய வெகுமதியுடனான போனஸை உறுதிசெய்யும் மாற்றியமைக்கக்கூடிய கட்டணத்திட்டங்களுக்கு வணக்கம் கூறி வரவேற்றுங்கள். உங்களுடைய நிதி நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும் போதும் உங்கள் அர்ப்பணிப்புக்களில் மாற்றம் ஏற்படும் போதும், திவி திலின எந்தவொரு வருமான மட்டத்துடனும் தடையின்றி அதனைச் சீரமைத்து, உங்கள் தேவைகள் வளர்வதற்கேற்ப உங்கள் காப்புறுதியையும் மேம்படுத்துகிறது. மேலும், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஒரு விரிவான பாதுகாப்புத் திட்டத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு நன்மைகளையும் காப்புறுதி வரம்பையும் விரிவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யுங்கள் - உங்களுடன் உருவாகும் பாதுகாப்பிற்கு திவி திலினவைத் தேர்ந்தெடுங்கள்.

அனுகூலங்கள்

கட்டுப்படியாகக் கூடிய தெரிவுகள்

உங்களுடைய நிதிசார் இலக்குகளுக்கேற்ப 5 வருடங்கள் முதல் 40 வருடங்கள் வரையிலான காப்புறுதிக் காலத்தை அனுபவித்திடுங்கள்.

நெகிழ்வான தவணைக்கட்டண கொடுப்பனவுகள்

உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட, பல்துறை விருப்பத்தேர்வுகளிலிருந்து தேர்வுசெய்யக்கூடிய தவணைக் கட்டண முறைகள்

விதிவிலக்குகளுடன் கூடிய போனஸ் கொடுப்பனவுகள்

வருடாந்தம் பிரகடனப்படுத்தப்படும் போனஸ் கொடுப்பனவுகளுக்கான மேலதிக தகைமையுடன் உயர்ந்தளவிலான போனஸ் கொடுப்பனவுகள்.

மேலதிக பாதுகாப்புக்களுடன் விரிவாக்கிக் கொள்ளக் கூடிய தெரிவுகள்

கடும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு, மருத்துவமனையில் சேர்க்கும் போது பாதுகாப்பு, வாழ்க்கைத் துணைக்கான காப்புறுதி போன்ற மேலும் பல விடயங்களைக் கொண்ட உயர்ந்தளவிலான பாதுகாப்புக்கான மேலதிக காப்புறுதிகளுடன் இணைந்த விதத்தில் விரிவாக்கப்படக் கூடியது.

நம்பகத்தன்மையுடனான குடும்ப ஆதரவு

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, சார்ந்திருப்பவர்களுக்கு மரணத்தின் போது வழங்கப்படும் நட்டஈடு ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பு மற்றும் கூட்டு போனஸ் கொடுப்பனவுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் இவ்வாதரவு மனதிற்கு அமைதியை அளிக்கக்கூடியது.

உள்ளடங்கியதொரு நெகிழ்ச்சித் தன்மை

உங்கள் வாழ்க்கைத் துணையையும் சார்ந்திருக்கும் ஐந்து பிள்ளைகளையும் மருத்துவமனைச் சேர்ப்பு அனுகூலங்களின் கீழ் உங்களது பாதுகாப்பை எளிதாக விரிவுபடுத்தி, விரிவானதொரு குடும்பக் காப்பீட்டை உறுதிசெய்து கொள்ள முடிதல்.

தகைமை

18 வயது தொடக்கம் 65 வயது வரையிலான வயதுவந்தவர்கள் திவி திலின காப்புறுதித் திட்டத்தில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Exclusive Rewards for You

Explore exclusive rewards with our Loyalty Program—our gift to you

  • 1

    Collect loyalty points on every renewal.

  • 2

    Avail of exclusive discount privileges.

  • 3

    Receive offers customized to your needs.

Insurance for all from the largest & strongest National Insurer