திவிசவி பாதுகாப்புத் திட்டம்
நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு வழங்கக்கூடிய மிகவும் பெறுமதி வாய்ந்த பரிசுகளில் ஒன்று, நிதி ஸ்திரத்தன்மை ஆகும். உங்கள் எதிர்பாராத மறைவின் போது, ஒரு நல்ல நிதித் திட்டத்தை வைத்திருப்பதென்பது முக்கியம் ஆகும். எமது சமீபத்திய திட்டத்தொகுப்பில் இலங்கையர்களின் மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கேற்ப அவர்களுடைய பல்வேறுபட்ட தேவைகளையும் அவர்களின் மாறுபட்ட நிதிசார் கடமைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக திவிசவிப் பாதுகாப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் கட்டுப்படியாகக்கூடிய இவ் ஆயுள் காப்புறுதித் திட்டமானது, இல. ரூபா 320 வரையான குறைந்த மாதாந்தக் கட்டுப்பணங்களுடன் ஆரம்பிப்பதுடன் உங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு நிதிசார் சுதந்திரமும் மனநிம்மதியும் கிடைப்பதை உறுதி செய்கிறது. திவிசவித் திட்டமானது, இலங்கையர்கள் தங்கள் வாழ்விலும் அவர்களின் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையிலும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய ஊக்குவிக்க இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அர்ப்பணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சமீபத்திய திட்டமாகும்.
அனுகூலங்கள்
கட்டுப்படியாகக்கூடிய தன்மை
நீண்ட-கால பாதுகாப்புடன் நிதிசார் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும் காப்புறுதிப் பத்திரத்தின் காலம் 5 வருடங்கள் முதல் 40 வருடங்கள் வரை ஆகும்.
நெகிழ்ச்சித் தன்மை
உங்கள் நிதிசார் திட்டங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் பெருமளவு நெகிழ்ச்சித் தன்மையுடனான தவணைக் கட்டணக் கொடுப்பனவு முறைகள் - மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, ஆண்டுக்கு இருமுறை அல்லது வருடாந்தம்.
உடனடி நட்டஈடு
தவணைக் கட்டணம் செலுத்தப்படும் காலத்தில் (இயற்கையாக அல்லது விபத்து காரணமாக) காப்புறுதிப் பத்திரத்தை வைத்திருப்பவர் மரணமடையும் போது சார்ந்திருப்பவர்களுக்கு நிதிசார் உதவியளிக்கும் வகையில் உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகை உடனடியாக நட்ட ஈடாக வழங்கப்படுவதை உறுதிசெய்கின்றது.
மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புடன் விரிவாக்கிக் கொள்ளக் கூடியது
வாழ்க்கைத் துணைக்கான காப்புறுதிப் பாதுகாப்பு, ஸ்ரீ லங்கா இன்~_ரன்ஸின் சத்திரசிகிச்சைக் கட்டணத் திட்டம், மருத்துவமனை காசுத் திட்டம், அனைத்துமடங்கிய உடல்நல ப்ளஸ் திட்டம் மற்றும் ஏனையவற்றையும் உள்ளடக்கிய உடல்நல பாதுகாப்புக்களுடன் விரிவாக்கிக் கொள்ளக் கூடியது.
தகைமை
18 வயது தொடக்கம் 65 வயது வரையிலான வயதுவந்தவர்கள் திவிசவித் திட்டத்தில் இணைவதற்கு தகைமையுடையவர்களாவார்கள்.
உறுதியான பாதுகாப்பை அடையும் விதமாக காப்புறுதி செய்யப்படும் ஆகக் குறைந்த தொகை இல.ரூ. 50,000 ஆக இருந்து வருதல் வேண்டும்.
Exclusive Rewards for You
Explore exclusive rewards with our Loyalty Program—our gift to you
-
1
Collect loyalty points on every renewal.
-
2
Avail of exclusive discount privileges.
-
3
Receive offers customized to your needs.