பாடசாலைக் கட்டணக் காப்பாளர்
பாடசாலைக் கட்டணக் காப்பாளர் ஒரு பாதுகாப்பு வலைபோலச் செயற்பட்டு, எதிர்பாராத நிகழ்வுகளின் போது உங்கள் பிள்ளையின் கல்விப் பயணத்தை பாதுகாப்பது மட்டுமன்றி, அதை உயர்த்தவும் செய்கிறது. எமது பாடசாலைக் கட்டணக் காப்பாளர், உங்கள் வாழ்க்கையில் எந்தத் தடங்கல் ஏற்பட்டாலும், இலங்கையின் புகழ்பெற்ற சர்வதேசப் பாடசாலைகளில் உங்கள் பிள்ளையின் தடை இல்லா கல்விப் பயணத்தை உறுதி செய்கிறது. ஒரே நேரடிக் கட்டுப்பணத்துடன், உங்கள் எதிர்பாராத மரணம் அல்லது உடல் இயலாமையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அவர்களின் கல்விப் பயணத்தை பாதுகாக்க முடியும். உங்கள் பிள்ளையின் மீதமுள்ள பாடசாலை கல்வி ஆண்டுகளை கருத்தில் கொண்டு திட்டத்தை வடிவமைத்து, அவர்களின் கல்வி பாதுகாப்பாக இருப்பதை அறிந்து மனநிம்மதியுடன் எளிமையையும் பாதுகாப்பையும் அனுபவிக்கவும். இன்றே இந்த புத்திசாலித்தனமான பாதையை தேர்ந்தெடுத்து அவர்களின் நாளைய சிறந்த வாய்ப்புகளை உறுதிசெய்வது எவ்வளவு இலகுவானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அனுகூலங்கள்
விரிவான கல்விக் காப்பீடு
இலங்கையில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் உங்கள் பிள்ளையின் முழு கல்விக் காலத்தையும் பாதுகாத்து, அவர்களின் கல்விப் பயணம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும் நிலையானதாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடிதல்.
நெகிழ்வான காப்பீட்டுத் திட்ட கால அளவு
உங்கள் பிள்ளையின் கல்வித் தேவைகளைப் போலவே, அவர்களின் மீதமுள்ள பாடசாலை ஆண்டுகளின் சரியான காலம் மற்றும் செலவுடன் பொருந்தக்கூடிய தனித்துவமான காப்பீட்டுத் திட்டத்தினை உருவாக்க முடிதல்.
தடையற்ற கற்றல் உத்தரவாதம்
உங்கள் இறப்பு அல்லது உடல் இயலாமை போன்ற துன்பங்கள் இடம்பெற நேரிட்டால், மீதமுள்ள பாடசாலைக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும், கல்வியை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.
ஒற்றைக் கட்டுப்பண வசதி
ஒரு கட்டணம் உங்கள் நிதித் திட்டமிடலை எளிதாக்கி அவர்களின் கல்விப் பயணத்தை பாதுகாக்கின்ற அதேவேளை தொடர்ச்சியான பாதுகாப்பையும் வழங்குறது.
ஆண்டு முழுவதும் பதிவு செய்யும் நெகிழ்வுத்தன்மை
கல்வி ஆண்டின் தொடக்கம் பற்றி கட்டுப்பாடுகளின்றி, எப்போது வேண்டுமானாலும் இந்தக் காப்பீட்டைப் பெறுவதற்கான சுதந்திரம் மற்றும் திட்டமிடலில் பன்முகத்தன்மையை வழங்குகிறது.
தகைமை
18 முதல் 65 வயதிற்குட்பட்ட தொலைநோக்குடைய பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது அவர்களின் பிள்ளைகளுக்கு பிரகாசமான கல்வி எதிர்காலத்தை உறுதியளிப்பதாக காணப்படுகின்றது.
Unlock Bright Futures
Experience peace of mind with comprehensive educational support for your children.
-
1
Stable, long-term financial planning for your child’s educational needs.
-
2
Coverage that adapts with your family’s evolving circumstances.
-
3
Access to enhanced protection features, ensuring well-rounded security.