மருத்துவமனைக் கட்டணத் திட்டம்

எமது மருத்துவமனை கட்டணத் திட்டத்துடன் இனி உங்கள் நிதிச்சுமையையும் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். இது நீங்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் நாட்களில் அன்றாட பணத் தேவைகளின் போது உங்களுக்கு ஆதரவளிக்கும்.

முதல் பக்கம் / மருத்துவமனைக் கட்டணத் திட்டம்

மருத்துவமனைக் கட்டணத் திட்டம்

எமது மருத்துவமனைக் கட்டணத் திட்டத்துடன், உங்களுக்கான மீளக்கூடிய, நிதிசார் எளிமையாக்கல் - நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் நிலையான, தினசரி பணம்சார் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். எமது தனித்துவமான சுகாதாரத் திட்டமானது, மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது ஏற்படும் உண்மையான செலவுகளைப் பொருட்படுத்தாது, தினசரி குறிப்பிட்டதொரு பணத்தொகையை உள்ளடக்கியதுடன் மேலதிக செலவுகளுக்கு காப்பீட்டுப் பத்திரதாரர்களுக்கு விரிவானதொரு காப்புறுதித் திட்டத்தை வழங்குகிறது.

மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட தினமும் இல. ரூபா.20,000 வரை சலுகைகள்.

நாளாந்த தீவிர சிகிச்சைக்கான பணத் தொகையை இரட்டிப்பாக்கும் அனுகூலம்.

நீங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தால், உங்களுக்கு கிடைக்கும் நாளாந்த காசுத் தொகையை இல.ரூபா.40,000 ஆக இரட்டிப்பாக்கப்படும். இது உங்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் மேலதிக ஆதரவை உறுதி செய்கிறது.

நீடிக்கப்பட்ட மருத்துவமனைத் தங்குமிடக் கட்டண போனஸ் தொகை

மருத்துவமனையில் சேர்ந்திருக்கும் காலம் 10 நாட்களுக்கு மேல் நீடித்தால் மேலதிக 4 நாட்களுக்கான பணக் கொடுப்பனவு. இது நீண்ட கால உடல் நிலை தேறலின் போது மனதிற்கு அமைதியளிக்கும் வகையிலானது.

வருடாந்த மருத்துவமனைக் கட்டண அனுகூலம்

ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் வழங்கும் ஆண்டுக்கு 180 நாட்கள் வரை நிதி ஆதரவை பெற்றுக்கொடுத்து அனுகூலமளிக்கும் மருத்துவமனை பணத் திட்டம் மூலம் உங்கள் பாதுகாப்பை வலுப்படுத்திடுங்கள்.

வருடாந்தம் 5 மடங்கு வரை - உச்ச வரம்பு

மொத்த காப்புறுதிக் காலப் பிரிவு தொடர்பாகவும் வருடாந்த உச்ச வரம்பில் 5 மடங்கு செலுத்தப்படும்.

தகைமை

18 வயது தொடக்கம் 60 வயது வரையிலான வயதுப் பிரிவைச் சேர்ந்த வயது வந்தவர்கள் இக்காப்புறுதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடிவதோடு, அவை 70ஆவது வயதில் முடிவிற்கு வரும். பிள்ளைகள் 3 மாதங்கள் தொடக்கம் 20 வருடங்கள் வரையிலான வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். 25 வயது வரையில் அவர்களுக்குக் காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படும்.

இது ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்துடன் பெறப்படுதல் வேண்டும்.

Exclusive Rewards for You

Explore exclusive rewards with our Loyalty Program—our gift to you

  • 1

    Collect loyalty points on every renewal.

  • 2

    Avail of exclusive discount privileges.

  • 3

    Receive offers customized to your needs.

Insurance for all from the largest & strongest National Insurer