சத்திரசிகிச்சைக் காப்பீட்டுத் திட்டம்

உங்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும் உள்ளடக்கியதொரு பராமரிப்புத் திட்டம்

முதல் பக்கம் / சத்திரசிகிச்சைக் காப்பீட்டுத் திட்டம்

சத்திரசிகிச்சைக் காப்பீட்டுத் திட்டம்

எதிர்பாராத நேரங்களில் ஏற்படக்கூடிய சத்திரசிகிச்சைகளின் போது நிதிசார் மனவமைதிக்காக, SLICஇன் சத்திரசிகிச்சைக் காப்பீட்டுத் திட்டமானது சத்திரசிகிச்சையின் போது ஏற்படக் கூடிய செலவுகளை ஈடுசெய்யும் வகையில், வரையறுக்கப்பட்ட உயர்ந்தபட்ச எல்லையிளுள் உறுதியானதொரு காப்புறுதியை வழங்குகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டமானது உங்களையும், உங்கள் துணைவியாரையும், சார்ந்துள்ள ஐந்து குழந்தைகளையும் உள்ளடக்கியதுடன், SLIC இன் ஆயுள் காப்பீட்டுக் திட்டத்திற்கும் மேலதிகமாகக் கிடைக்கக்கூடியதாகும்.

அனுகூலங்கள்

இல. ரூபா. 1,000,000 வரையிலான சத்திரசிகிச்சைக் காப்புறுதி

சத்திரசிகிச்சையினதும் அதன் அனுகூலத்தின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்ட சதவீதங்களுடன் இல. ரூபா. 1,000,000 வரையிலான சத்திரசிகிச்சைகளுக்குக் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடிதல்.

விரிவான சத்திரசிகிச்சை உத்தரவாதம்

பட்டியலிடப்பட்ட 360க்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சைகள் மற்றும் பட்டியலிடப்படாத மேலும் பல சத்திரசிகிச்சைகள் என்பவற்றுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படுதல்.

நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய சத்திரசிகிச்சைக் கட்டணத் திட்ட அனுகூலங்கள்.

உங்களது சத்திரசிகிச்சைக் கட்டணத் திட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் தொகையில் 10% தொடக்கம் 100% வரையிலான கோரிக்கைகளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடிவதோடு, வடிவமைக்கப்பட்ட நிதிசார் ஆதரவையும் உறுதிசெய்து கொள்ள முடிதல்.

உங்கள் பாதுகாப்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

காப்புறுதிக் காலம் முழுவதும் காப்பீடு செய்யப்பட்ட மதிப்பை விட ஐந்து மடங்கு வரை விரிவடையக் கூடிய காப்புறுதி அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இது கணிகமானளவு நிதிசார் பாதுகாப்பையும் உங்களுக்கு வழங்குகின்றது.

உலகலாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகள்

விரிவான சர்வதேச ஆதரவு கிடைக்கும் வகையிலான சிங்கப்பூர், இந்தியா, மலேசியா மற்றும் இலங்கையிலுள்ள சிறந்த மருத்துவ மையங்களை அணுக முடிதல்.

காப்புறுதிக் காலப்பிரிவு

5 வருடங்கள் முதல் 30 வருடங்கள் வரையிலான காப்புறுதிக் காலம்.

தகைமை

70 வயதில் காப்புறுதிப் பாதுகாப்பு முடிவடையும் விதமாக, 18 வயது தொடக்கம் 60 வயது வரையிலான வயதுவந்த தனிநபர்கள் காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். பிள்ளைகள் 3 மாதம் தொடக்கம் 20 வயது வரையிலான வயதுப் பிரிவில் இருந்து வருதல் வேண்டியதோடு, அவர்களது 25 ஆவது வயது வரையில் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Exclusive Rewards for You

Explore exclusive rewards with our Loyalty Program—our gift to you

  • 1

    Collect loyalty points on every renewal.

  • 2

    Avail of exclusive discount privileges.

  • 3

    Receive offers customized to your needs.

Insurance for all from the largest & strongest National Insurer