ஏர்லி கேஷ் முன்கூட்டிய அனுகூலத் திட்டம்
முன்கூட்டிய நிதிச் சுதந்திரத்துடன் உங்களுக்கு அதிகாரம் அளிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அற்புதமான ஆயுள் காப்பீட்டு விருப்பமான ஏர்லி கேஷ் முன்கூட்டிய அனுகூலத் திட்டத்தை ஆராயுங்கள். கல்விக்கான நிதியை உருவாக்க, வீடு வாங்குதல், புதிய கார் வாங்குதல் அல்லது அவர்களின் கனவு திருமணத்தைத் திட்டமிடுதல் போன்ற குறிப்பிடத்தக்க வாழ்க்கை இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு தனிநபர்களுக்காக இந்த புதுமையான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே பணத்துடன், உங்கள் காப்புறுதிப் பத்திரம் முதிர்ச்சியடைவதற்கு முன்னர் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படைத் தொகையில் 50% வரையில் பெற்றுக் கொள்ள முடியும், அதே நேரத்தில் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஒரு விரிவான பாதுகாப்புத் திட்டத்தின் பலன்களை தொடர்ந்து அனுபவிக்கலாம். மேலும், முன்கூட்டிய பணம் உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையுடன் அதிகரித்து, உங்களுக்கு இன்னும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இப்போதே தொடங்கி, முன்கூட்டிய பணத்துடன் உங்கள் நிதி எதிர்காலத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி உங்கள் அபிலாஷைகளை யதார்த்தமாக மாற்றிடுங்கள்.
அனுகூலங்கள்
முதிர்ச்சியடைவதற்கு முன்னரான முற்கொடுப்பனவுகள்
10 வருட திட்டங்களுக்கு 50% மற்றும் 15, 20 வருட திட்டங்களுக்கு 40% எனமுதிர்ச்சியடைவதற்கு முன்னர் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படைத் தொகையின் 50% வரையிலான 2 முற்கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
கூட்டு போனஸ் கணிக்கப்படும் விதம்
முதிரச்சியின் போது அசல் தொகையின் அடிப்படையில் ஒட்டுமொத்த போனஸால் உயர்த்தப்பட்ட, உங்களின் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் தொகையின் மிகுதிக் கொடுப்பனவையும் பெறுவதன் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
மரணத்தின் போது வழங்கப்படும் இழப்பீடு
முந்தைய முன்னெடுப்புகளைப் பொருட்படுத்தாமல், சார்ந்துள்ளவர்கள் மொத்த உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை மற்றும் திரட்டப்பட்ட போனஸ்கள் அனைத்தையும் பெறுவார்கள்.
கட்டுப்பணம் செலுத்தும் முறைகள்
மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுகொருமுறை செலுத்தும் நெகிழ்வுத்தன்மையுடன் 10, 15 அல்லது 20 ஆண்டுகள் என்ற காப்புறுதித் திட்ட காலங்களில் இருந்து தெரிவு செய்யுங்கள்.
மேலதிக பாதுகாப்புக்கள்
கடுமையான நோய்கள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுதல், வாழ்க்கைத் துணைக்கான காப்பீடு மற்றும் பல விருப்பத்தேர்வுகளுடன் உங்கள் பாதுகாப்பு வலையை மேம்படுத்துங்கள்.
நெகிழ்வுத்தன்மை
உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் ஐந்து பிள்ளைகள் வரையிலும் மருத்துவமனை காப்புறுதி பயன்களுக்கென எளிதாக சேர்த்துக் கொள்ள முடியும்.
தகைமை
ஏர்லி கேஷ் முன்கூட்டிய அனுகூலத் திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயது வந்தவர்கள் தகுதியுடையவர்கள்.
tho;f;if Fwpj;j ePz;l கால குறிக்கோள்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இளம் தொழில்வாண்மையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
உங்களுக்கான பிரத்தியேக வெகுமதிகள்
எமது லோயல்டி திட்டத்துடன் பிரத்தியேக வெகுமதிகளை ஆராயுங்கள் – உங்களுக்கான எமது பரிசு
-
1
ஒவ்வொரு புதுப்பித்தலிலும் லோயல்டி புள்ளிகளைச் சேகரியுங்கள்.
-
2
பிரத்தியேக கழிவுச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
-
3
உங்கள் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சலுகைகளைப் பெறுங்கள்.