ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் வெல்த் ப்ளஸ்

குறுகிய கால கொடுப்பனவுகள், நீண்ட கால வெகுமதிகள்

முதல் பக்கம் / ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் வெல்த் ப்ளஸ்

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் வெல்த் ப்ளஸ் திட்டம் என்றால் என்ன?

குறுகிய கால கட்டுப்பண கடப்பாடுகளை விரிவான நீண்ட கால அனுகூலங்களுடன் புத்திசாலித்தனமாக ஒருங்கிணைக்கும் எங்கள் மூலகரமான வெல்த் ப்ளஸ் நிதித் திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள். தூரநோக்குடன் சிந்திக்கும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு குறைவான கட்டுப்பணச் செலுத்துதல் தேவைப்படுவது மட்டுமல்லாமல் இது கணிசமான வளர்ச்சியையும் உறுதி செய்கின்றது. உங்கள் ஆரம்ப காப்பீட்டுத் தொகை எளிய வட்டி அடிப்படையில் ஆண்டுதோறும் 5% அதிகரித்து 20 ஆண்டுகளுக்குப் பின்னரான முதிர்வு நேரத்தில் உங்கள் முதலீடு இரட்டிப்பாவதை கண்கூடாகக் காணுங்கள். வெல்த் ப்ளஸ் மூலம், நீங்கள் வெறுமனே சேமிப்பை மாத்திரம் செய்யவில்லை; வளமானதொரு எதிர்காலத்திற்காக உங்கள் செல்வத்தை தீவிரமாக வளர்த்து வருகிறீர்கள்.

அனுகூலங்கள்

நெகிழ்வுத்தன்மை

உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் காப்புறுதித் திட்டத்தை மாற்றியமையுங்கள். அனைவருக்கும் அத்தியாவசிய மருத்துவமனை பயன்கள் கிடைப்பதை உறுதி செய்து உங்கள் மனைவி மற்றும் சார்ந்திருக்கும் ஐந்து பிள்ளைகள் வரையிலும் காப்பீட்டை நீடியுங்கள்.

உத்தரவாதப்படுத்தப்பட்ட கூட்டு போனஸ் தொகை

எங்களின் உத்தரவாதமான ஒட்டுமொத்த போனஸுடன் உங்கள் காப்பீடு காலப்போக்கில் வளர்ச்சி பெறுவதைப் பாருங்கள். முதிர்ச்சியின் போதான மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்து, உங்களின் உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை போனஸுடன் சேர்த்து அதிகரிக்கிறது.

மரணத்தின் போது வழங்கப்படும் இழப்பீடு

உங்கள் அன்புள்ளவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை அறிந்து நிம்மதியாக இருங்கள். நீங்கள் இறக்கும் சந்தர்ப்பத்தில், சார்ந்திருப்பவர்கள் அதிகரிக்கப்பட்ட தொகையின் 125% இற்குரிய இழப்பீட்டை பெறுவர், மேலும் இது ஒட்டுமொத்த போனஸால் அதிகரிக்கப்படும்.

மேலதிக காப்புறுதிப் பாதுகாப்புக்கள்

உங்கள் காப்பீட்டை விரிவுபடுத்தி கூடுதல் பாதுகாப்புகளைப் பெற்றிடுங்கள். வாழ்க்கைத் துணைக்கான காப்புறுதி, அறுவை சிகிச்சை காப்புறுதி மற்றும் முழுமையான ஹெல்த் ப்ளஸ் போன்ற கூடுதல் சுகாதார காப்பீடுகள் உள்ளடங்கலாக, கடுமையான நோய்க் காப்பீடு முதல் மருத்துவமனை காப்பீடு வரையும் விரிவான மருத்துவக் காப்பீட்டு விருப்பங்களை வழங்குகிறது.

கட்டுப்பணம் செலுத்தும் முறைகள்

உங்கள் வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்ட மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கொருமுறை என்ற பல்வேறு கட்டண அளவீடுகளில் இருந்து தெரிவு செய்யுங்கள்.

காப்புறுதிப் பத்திரத்தின் கால அளவுகள்

3, 5 அல்லது 7 ஆண்டுகள் என கட்டணக் காலங்களை வழங்கும் எங்கள் குறுகிய காலக் கட்டுப்பணத் திட்டங்களுடன் நெகிழ்வுத்தன்மையைப் பெற்றிடுங்கள். 10, 15 அல்லது 20 ஆண்டுகள் நீடித்த காப்புறுதித் திட்ட விதிமுறைகளுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்.

தகைமை

காப்புறுதி உத்தரவாதம் பெறும் ஆகக் குறைந்த தொகை இல.ரூ. 100,000 ஆக இருத்தல்

வெல்த் ப்ளஸ் காப்புறுதித் திட்டத்தில் சேர்ந்து கொள்வர்கள் 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயது வந்தவர்களாக இருத்தல்.

உங்களுக்கான பிரத்தியேக வெகுமதிகள்

எமது லோயல்டி திட்டத்துடன் பிரத்தியேக வெகுமதிகளை ஆராயுங்கள் – உங்களுக்கான எமது பரிசு

  • 1

    ஒவ்வொரு புதுப்பித்தலிலும் லோயல்டி புள்ளிகளைச் சேகரியுங்கள்.

  • 2

    பிரத்தியேக கழிவுச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

  • 3

    உங்கள் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சலுகைகளைப் பெறுங்கள்.

மிகப்பெரிய மற்றும் வலிமையான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்குமான காப்புறுதி