ஜன திறி - இரண்டு வருட நிவாரணத் திட்டம்

உங்கள் வருமான பருவங்களுக்கு ஏற்ப ஒரு பாதுகாப்பு

முதல் பக்கம் / ஜன திறி - இரண்டு வருட நிவாரணத் திட்டம்

ஜன திறி - இரண்டு வருட நிவாரணத் திட்டம்

மாறுபடும் வருமானங்களைக் கொண்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டஇ ஜன திறி - இரண்டு வருட நிவாரணத் திட்டம் என்பது ஆண்டு முழுவதும் நிகரற்ற நன்மைகளை வழங்கும் ஒரு தனித்துவமான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆகும். விவசாயம்இ சுற்றுலா அல்லது பிற பருவகாலத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் இந்தத் திட்டம் உங்கள் கட்டுப்பணம் 2 ஆண்டுகள் தாமதமாக இருக்கும் சந்தர்ப்பத்திலும் கூட முழுமையான ஆயுள் பாதுகாப்பை வழங்குகிறது. ஜன திறி நீங்கள் நெருக்கடியான காலங்களிலும் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதி செய்வதோடு நிதி நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த தேர்வாகவும் அமைகிறது.

அனுகூலங்கள்

நீட்டிக்கப்பட்ட சலுகைக் காலம்

தடையில்லாப் பாதுகாப்புத் திட்டப் பலன்களுடன், முதல் வருடத்திற்குப் பிறகு செலுத்தப்படாத கட்டுப்பணங்களில் 2 வருட சலுகைக் காலத்தை அனுபவிக்கவும்.

மாறுபட்ட காப்பீட்டுத் திட்ட விதிமுறைகள்

10 முதல் 40 ஆண்டுகள் வரையிலான விதிமுறைகளுடன், உங்கள் தேவைகளுக்கு ஏற்ற காப்பீட்டுத் திட்டக் காலத்தை தெரிவு செய்யுங்கள்.

நெகிழ்வான கட்டுப்பணக் கட்டணங்கள்

மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கொருமுறை என்ற அடிப்படையில் உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற கட்டண அட்டவணையைத் தெரிவு செய்யுங்கள்.

உத்தரவாதமான ஒட்டுமொத்த போனஸ்

மொத்தக் காப்பீட்டுத் தொகையில் 100% உத்தரவாதத்தையும் முதிர்ச்சியின் போது ஒட்டுமொத்த போனஸையும் பெறுங்கள்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தெரிவுகள்

கடுமையான நோய், மருத்துவமனை அனுமதி மற்றும் வாழ்க்கைத் துணைக்கான காப்பீடு போன்ற கூடுதல் விருப்பங்களுடன் உங்கள் பாதுகாப்பை வடிவமையுங்கள்.

மரணத்தின் போது வழங்கப்படும் இழப்பீடு

உங்கள் மறைவின் பின்னர் செலுத்தப்படும் உத்தரவாதமளிக்கப்பட தொகை மற்றும் ஒட்டுமொத்த போனஸுடன் உங்களைச் சார்ந்திருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

கூடுதல் நெகிழ்வுத்தன்மை

உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் சார்ந்திருக்கும் ஐந்து பிள்ளைகள் வரையில் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்கான காப்புறுதியைப் பெறுங்கள்.

தகைமை

ஜன திறி காப்புறுதித் திட்டத்தில் 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயது வந்தவர்கள் சேர்ந்து கொள்ளத் தகுதியானவர்கள்.

விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள நிபுணர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கான பிரத்தியேக வெகுமதிகள்

எமது லோயல்டி திட்டத்துடன் பிரத்தியேக வெகுமதிகளை ஆராயுங்கள் – உங்களுக்கான எமது பரிசு

  • 1

    ஒவ்வொரு புதுப்பித்தலிலும் லோயல்டி புள்ளிகளைச் சேகரியுங்கள்.

  • 2

    பிரத்தியேக கழிவுச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

  • 3

    உங்கள் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சலுகைகளைப் பெறுங்கள்.

மிகப்பெரிய மற்றும் வலிமையான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்குமான காப்புறுதி