ஸ்பீட் இன்வெஸ்ட்மென்ட் திட்டம்
நம்பகமான நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஸ்பீட் இன்வெஸ்ட்மென்ட் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைக் கருத்தில்கொள்ளுங்கள். இந்த திட்டத்துடன், உங்களின் கட்டுப்பணம் மாறாமல் இருக்கின்ற அதேவளை, உங்கள் காப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் 5% ஆல் அதிகரிக்கும். வெறும் 20 ஆண்டுகளில், உங்கள் ஆரம்பத் தொகையை இரட்டிப்பாகப் பெறுவீர்கள், இது உங்கள் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பாக அமைக்க உதவும்!
உதாரணம்: இல.ரூ. 500,000 உத்தரவாதத்துடன் கூடிய காப்புறுதித் திட்டமொன்றுக்கு:
10ஆவது ஆண்டில்
ஆதாயம் இல.ரூ. 750,000 + போனஸ் கொடுப்பனவுகள்
20ஆவது ஆண்டில்
ஆதாயம் இல.ரூ. 1,000,000+ போனஸ் கொடுப்பனவுகள் (உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகையில் இரண்டு மடங்கு)
30ஆவது ஆண்டில்
ஆதாயம் இல.ரூ. 1,250,000 + போனஸ் கொடுப்பனவுகள்
அனுகூலங்கள்
உத்தரவாதப்படுத்தப்பட்ட வருடாந்த அதிகரிப்பு
கட்டுப்பணத்தில் எந்தவொரு அதிகரிப்பும் இன்றி உங்கள் காப்பீட்டுத் தொகையில் உத்தரவாதப்படுத்தப்பட்ட 5% வருடாந்த அதிகரிப்பை அனுபவியுங்கள்.
அதிகரித்த அளவிலான போனஸ் கொடுப்பனவுகள்
முதிர்ச்சியின் போது உத்தரவாதப்படுத்தப்பட்ட அதிகரித்த அடிப்படைத் தொகையுடன் ஒட்டுமொத்த போனஸையும் பெறுங்கள்.
காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு
10, 15, 20, 25, 30, 35 அல்லது 40 ஆண்டுகள் என்ற காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவில் இருந்து தேர்வு செய்யுங்கள்.
கட்டுப்பணம் செலுத்தும் முறைகள்
நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய விதத்தில் மாதாந்தம், காலாண்டுக்கு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என கட்டுப்பணம் செலுத்தும் முறைகள்.
மேலதிக காப்புறுதிப் பாதுகாப்புக்கள்
கடுமையான நோய், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுதல், வாழ்க்கைத் துணைக்கான காப்பீடு மற்றும் இன்னும் பல விருப்பத்தேர்வுக் காப்பீடுகள் மூலம் உங்கள் பாதுகாப்பை மேம்படுத்துங்கள்.
மரணத்தின் போது செலுத்தப்படும் இழப்பீடு
காப்புறுதிப்பத்திரதாரரின் மரணம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், சார்ந்திருப்பவர்கள் 5% வட்டி விகித அதிகரிப்பின் அடிப்படையில், இரட்டிப்பான அடிப்படை காப்பீட்டுத் தொகை மற்றும் திரட்டப்பட்ட போனஸ்களின் மொத்த தொகையைப் பெறுவார்கள்.
நெகிழ்வுத்தன்மை
முழுமையாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது உங்கள் வாழ்க்கைத்துணைக்கும், ஐந்து பிள்ளைகள் வரையிலும் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய நெகிழ்வுத்தன்மை.
தகைமை
18 முதல் 65 வயதுடைய வயது வந்தவர்கள் ஸ்பீட் இன்வெஸ்ட்மென்ட் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.
உங்களுக்கான பிரத்தியேக வெகுமதிகள்
எமது லோயல்டி திட்டத்துடன் பிரத்தியேக வெகுமதிகளை ஆராயுங்கள் – உங்களுக்கான எமது பரிசு
-
1
ஒவ்வொரு புதுப்பித்தலிலும் லோயல்டி புள்ளிகளைச் சேகரியுங்கள்.
-
2
பிரத்தியேக கழிவுச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
-
3
உங்கள் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சலுகைகளைப் பெறுங்கள்.